சங்கடஹரசதுர்த்தி சிறப்புப் பரிகாரப் பலன்கள்

Saturday 3 February 2018


தலைப்பு 
சங்கடஹரசதுர்த்தி வழிபாட்டின் சிறப்பு பலன்கள்

விளக்கம் 
சங்கடங்களை அழிக்கும் சதுர்த்தி தினம் சிறப்புப் பலன்கள்
சங்கட ( சங்கடம் ) ஹர ( அழிக்கும் ) சதுர்த்தி ( நாள் )

ஜோதிடமும் ஆன்மீகத் தொடர்பும் 
ஜோதிடத்தில் ராகு கேது என்னும் சாயா அ நிழல் கிரகங்கள் 
நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் என அழைக்கப்படும் கிரகம் கேது பகவான் ஆகும். ஜோதிடத்தில் கிரகங்களில் பலவான்கள் ராகு மாற்று கேது ஆகும்.

ராகு பகவான் 
ராகு புறவாழ்வை தரும் யோகாதிபதி ஆகும். ராகு காரகதுவங்கள் படி அகவாழ்வையும் ( உடல்சார்ந்த விசயங்கள் வசித்தல் முதல் குடும்பம் மனைவி etc...) புறவாழ்வையும் ( பொருட்சார்ந்த விசயங்கள் வேலை தொழில் பணம் etc..) ராகு கிரக காரகதுவங்கள் படி அமைத்துக் கொண்டால் யோகம் தரும் யோகாதிபதி ராகு பகவான் ஆவார்.

கேது பகவான் 
அகவாழ்வில் கேது பகவான் 
கேது அகவாழ்வில் ஞானம், அறிவு, உண்மைநிலை, யோகநிலை, சித்தி போன்ற யோகங்களைத் தரும் ஞானக்காரகன்.

அகவாழ்வில் கேது பகவான் 
அகவாழ்வில் குடும்பம், தாம்பத்யம், போன்ற வகையில் மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவற்றில் முழுமையான அக்கறையின்மை அ முழுமையான இடுபாடு காட்டாத நிலை, மனதளவில் வெறுப்புணர்ச்சி, கருத்து வேறுபாடு, விரக்தி, வம்பு வழக்கு, பிரிவு etc..போன்ற உடல் சார்ந்த விசயங்களுக்கும் கெடுபலன் தருபவர் ஆவார்.

புறவாழ்வில் கேது பகவான் 
புறம் சார்ந்த வேலை, தொழில், தனம், பதவி உயர்வு போன்ற புறவாழ்க்கை  சார்ந்த விசயங்களுக்கும்  கெடுபலன் தருபவர் ஆவார்.

கேது திசா புத்தி 
ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் கேது திசா அ புத்தி நடப்பில் உள்ளவர்கள் அல்லது கோட்சாரப் பெயர்ச்சி சஞ்சார கேது ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் உள்ள சுப கிரகங்களான குரு சுக்கிரன் சனி போன்ற கிரகங்களை ( கோள்கள் ) பார்க்கும் காலம் அல்லது சுப கிரகங்களுடன் சேர்கைப் பெரும் காலம் மேலே சொன்ன அகம் புறம் சார்ந்த விசயங்களில் தனது கிரகக் காரகதுவங்களை செயல் படுத்துவார்.

கேது திசா அ புத்தி அல்லது கேது கோட்சாரப் பெயர்ச்சிப் பலன்கள் 3௦% கெடுபலன் உண்டாகும் காலம். கேது சுயசாரம் ( அஷ்வினி மகம் மூலம் கேது நட்சத்திரங்கள் ) ஜாதகத்தில் பெற்றால் கெடுபலன்கள் மேலும் அதிகம்.

கேது நட்சத்திர நட்சத்திர சாரம் பெரும் கிரகங்கள் 
சூரியன் புதன் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் குரு சனி மற்றும் ராகு போன்ற கிரகங்கள் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரங்களில் அ நட்சத்திரங்களின் பாதங்களில் ஜெனன காலப் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் நிற்கப் பெற்றவர்கள், மேலே குறிப்பிட்ட கிரகங்களின் திசா அ புத்தி காலங்களில் கெடுபலன்கள் 7௦% நடைபெறும் காலங்களாகும்.

கேது பகவான் அதிதேவதைகள் வழிபாடு 
கேதுவின் முதன்மை அதிதேவதை விநாயகப் பெருமான் ஆவார். மேலும் துறவிகள் அதாவது சன்யாசிகள் பதினெண் சித்தர்கள் திருமூலர், இராமதேவ சித்தர், கும்பமுனி, இடைகாடார், தன்வந்தரி, வால்மீகி, கமலமுனி, போகர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்தி தேவர், போதகுரு, பாம்பாட்டி சித்தர், சட்டைமுனி, சுந்தரானந்தர், குதம்பைசித்தர் மற்றும் கோரக்கர் போன்றோரும், அனுமன் மற்றும் வினாயகர் கடவுள்களும் ஆவார்கள்.

கேது ஸ்தலம் அ ஆலயங்கள் 
காலஹஷ்தி, திருப்பாம்பூர் மற்றும் கீழ்பெரும்பள்ளம்

சங்கடஹரசதுர்த்தி சிறப்பு 
சங்கடஹரஷதுர்த்தி நாளில் விநாயகப் பெருமான் வழிபாடு சிறப்புப் பலன்களைத் தரும். மேலும் கேது கிரக ராசிக்கல் வைடூரியம் ஆகும். கேது கரகத் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் பால் அ கோமியத்தில் மோதிரத்தை சுத்தப்படுத்தி வினாயப்பெருமான் ஆலயத்தில் வழிபட்டு சங்கடஹர சதுர்த்தி நாளில் அணித்து கொள்ளலாம். மேலும் சங்கடஹர சதுர்த்தி நாளில் பல பிரசித்திப் பெற்ற பிள்ளையார் ஆலயங்களில் கணபதி ஹோமம் நடைபெறும். ஹோமத்தில் சங்கடஹர சதுர்த்தி நாளில் கலந்து கொள்வது மேலும் சிறப்பானப் பலன்களைத் தரும்.

தடைகளைத் களையும் பரிகார நாள் 
மேலும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு, பிரிவு, வம்பு வழக்கு, விவாகரத்து, தொழில்த்தடை, முன்னேற்றமின்மை, அலட்சியம், முழுமையான அக்கறைக் காட்ட முடியாத நிலை, புத்திரதோஷம், புத்திரத்தடை, திருமணத்தடை, திருமணத் தாமதம், சுயமுயற்சியின்மை, மனோபலம், தைரியம், தன்னம்பிக்கை குறைவு, வீடு நிலம் போன்ற சொத்து வகையில் வம்பு வழக்கு, போட்டிப் போட்டு வெற்றி பெற இயலாத நிலை, அபிமிருத்யுஞ் தோஷம், தந்தை மகன் மகள் மற்றும் மக்களுடன் கருத்து வேறுபாடு, பலவித லாபம், மனத்திருப்தியின்மை, அசைகள் எண்ணங்கள் பூர்த்தி பெறாத நிலை போன்ற காரணங்களுக்கு ஒரு வகையில் மனிதன் மீது கேது பகவானின் ( கிரக காரகதுவங்கள் அ குணாதிசயங்கள் ) ஆதிக்கமே காரணம். மேற்கண்ட சங்கடங்களைத் தவிர்க்கும் நாள் சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும். 

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். ஜோதிடப் பாடங்கள் மற்றும் பதிவுகள் சம்பந்தமான ஜோதிடச் சந்தேகங்களுக்கு பதில் தரப்படும் கமெண்ட் செய்யவும்.










பதிவு 2
கணவன் மனைவி கருத்து வேறுபாடு, பிரிவு,